மக்கள் கிராம சபை கூட்டம்: மு.க.ஸ்டாலின் விராலிமலைக்கு நாளை மறுநாள் வருகை
தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் விராலிமலைக்கு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வருகை தருகிறார்.
புதுக்கோட்டை,
தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசி வருகிறார். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்கு வருகிற 8-ந் தேதி மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். அவர் அங்கு நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். மக்கள் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான இடத்தினை தயார் செய்து வருகின்றனர்.
தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் புதுக்கோட்டையில் தி.மு.க. கட்சி அலுவலகத்தில் காணொலிக்காட்சி மூலம் கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். தற்போது கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் விராலிமலைக்கு வருகிறார். அவரை வரவேற்க தி.மு.க.வினர் ஏற்பாடுகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.