தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும் - சபாநாயகரிடம் பொதுமக்கள் மனு
அவினாசி அருகே தொழில் பூங்கா அமைப்பதை ரத்து செய்து அரசானைய வெளியிட வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அவினாசி வந்த சபாநாயகர் தனபாலிடம், கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவி்ல கூறப்பட்டு இருப்பதாவது:-
அவினாசி,
அவினாசி தாலுகா தத்தனூர் ஊராட்சி புஞ்சை தாமரை குளம் மற்றும் புலிப்பார் ஊராட்சி பகுதிகளில் சிப்காட் நிறுவனத்தால் தொழில் பூங்கா அமைப்பதற்கு நிர்வாக அனுமதி பெற பல்வேறு வகையில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதி மக்கள் அனைவரும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களான கால்நடை வளர்த்தல் மற்றும் விவசாயக் கூலி வேலைகள் மட்டுமே பிரதானமாக சார்ந்து வாழ்ந்து வருகிறோம்.
தத்தனூர் கிராமத்தில் உள்ள புதுச்சந்தை ஆட்டுச் சந்தையில் ஒவ்வொரு வாரமும் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை ஆகும். அளவுக்கு இப்பகுதி விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் சார்ந்து வாழ்ந்து வருகிறது.
சிப்காட் தொழிற்சாலைகள் அமைக்க எங்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாங்கள் அகதிகளாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிப்காட் நிறுவனம் இப்பகுதியில் வேண்டாம் என 3 ஊராட்சிகளில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே இப்பகுதி மக்களின் நிலையை கருத்தில் கொண்டு பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அரசு இத்திட்டத்தை ரத்து செய்ததாக அரசாணை வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.