கமுதி அருகே, காதல் விவகாரத்தில் மோதல்; வீடுகள் சூறை- 6 பேர் கைது

காதல் விவகாரத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் வீடுகள் அடித்து ெநாறுக்கப்பட்டன. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2021-01-05 15:03 GMT
கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருமாள் குடும்பன்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது49). இவரது தரப்புக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் தரப்புக்கும் ஏற்கனவே உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாரிமுத்து தரப்பைச் சேர்ந்த ஒருவரது மகனும், பெருமாள் தரப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை காதலர்கள் ஊரைவிட்டு சென்றனர்.

இதனை அறிந்த பெருமாள் தரப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் அரிவாள், வேல்கம்பு, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாரிமுத்து மற்றும் அவரது உறவினர்களின் 3 வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடினர்.. இதில் டி.வி. மற்றும் வீட்டு உபயோகப்பொருள்கள் என ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாரிமுத்து மனைவி பாக்கியத்தையும் (45) தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த பாக்கியம் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாக்கியம் கமுதி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பெருமாள், பழனிசாமி உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்