வேலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய பரிசோதனையில் 7 பேருக்கு மட்டும் புதிதாக தொற்று உறுதியானது.

Update: 2021-01-05 12:23 GMT
வேலூர், 

வேலூர் மாநகராட்சி பகுதியில் 2 பேர், வேப்பம்பட்டு, மேல்மொணவூர், அடுக்கம்பாறை, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் மற்றும் குடியாத்தம் தாலுகாவில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 298 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 19 ஆயிரத்து 792 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 340 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தற்போது 166 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்