குமரியில் 5½ லட்சம் பேருக்கு 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்

குமரி மாவட்டத்தில் 5½ லட்சம் பேருக்கு 2,500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.;

Update: 2021-01-05 04:13 GMT
நாகர்கோவில்,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நேற்று தொடங்கியது. இதே போல குமரி மாவட்டத்திலும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இதற்கான தொடக்க விழா தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட பூதப்பாண்டி ரத வீதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் நடந்தது.

தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி திட்ட விளக்க உரையாற்றினார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பயனாளி ஒருவருக்கு பொங்கல் பரிசு தொகுப்ைப வழங்கி தொடங்கி வைத்தார்.

இதே போல கோட்டார் வாகையடி தெருவில் உள்ள ரேஷன் கடையிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், “தமிழக அரசு உத்தரவுப்படி குமரி மாவட்டத்தில் 770 ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்கப்பட்டு உள்ளது. மொத்தம் 5 லட்சத்து 49 ஆயிரத்து 800 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு இருப்பதால் பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்து பரிசு தொகுப்பை வாங்கி செல்ல வேண்டும்” என்றார்.

இதைத் தொடா்ந்்து பறக்கை மற்றும் சந்தையடி ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை அவர் தொடங்கி வைத்தார்.

சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.

பூதப்பாண்டியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரன், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், துணை தலைவர் லாயம் ஷேக், தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. துணைச் செயலாளர்கள் ரோகிணி அய்யப்பன், ரமணி, பொருளாளர் தென்கரை மகாராஜன், பூதப்பாண்டி பேரூர் செயலாளர் முகமது ஷாபி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட வழங்கல் அதிகாரி சொர்ணராஜ் நன்றி கூறினார்.

வாகையடி தெருவில் நடைபெற்ற விழாவில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., ஊட்டுவாழ்மடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஜஸ்டன், அ.தி.மு.க. மாநகர செயலாளர் சந்துரு, சுகுமாரன், மணிகண்டன், ரபீக், தி.மு.க. மாநகர செயலாளர் மகேஷ் உள்பட பலர் கலந்துெகாண்டனர்.

வடலிவிளை

இதே போல நாகர்கோவில் வடலிவிளை ரேஷன் கடையில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவுக்கு கூட்டுறவு கடன் சங்க தலைவர் உதயகுமார் தலைமை தாங்கி பரிசு தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினார். விழாவுக்கு தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ் முன்னிலை வகித்தார். சங்க துணை தலைவர் ராஜேந்திரன், சேகர், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தோவாளை வடக்கூர் மற்றும் கிருஷ்ணன்புதூர் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் வழங்கினார். விழாவுக்கு சங்கத்தலைவர் சகாய திலகராஜ் தலைமை தாங்கினார். தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.சி.யூ. மணி, எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் சபரிகிரீசன், அ.தி.மு.க முன்னாள் ஊராட்சி செயலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தடிக்காரன்கோணத்தில் தோவாளை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மேரிஜாய் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். வார்டு உறுப்பினர் அஜன், ரமணி, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொட்டாரம்

கொட்டாரம் சந்தையடி நியாயவிலைக் கடையில் நடந்த விழாவுக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன் முன்னிலை வகித்தார். கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் வக்கீல் காட்வின் ஏசுதாஸ் வரவேற்று பேசினார்.

விழாவில் மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் சங்கரன், மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் சொர்ணராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளர் சுந்தர் சிங், அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளர் கைலாசம், கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் சுரேஷ்் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஞ்சுகிராமம்

அஞ்சுகிராமம் ரேஷன் கடையில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் ஜெசீம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். இதில், அஞ்சுகிராமம் பேரூர் அதிமுக செயலாளர் ராஜபாண்டியன், கிளைச் செயலாளர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இரவிபுதூர் ரேஷன் கடையில் இரவிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவி லட்சுமி சீனிவாசன் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மருங்கூர் பேரூர் அதிமுக செயலாளர் சீனிவாசன் மற்றும் வங்கி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

கடுக்கரை

அழகப்பபுரம் மெயின் ரோடு உள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சியில் அழகப்பபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவி ஜொஹானா அசோக் தலைமை தாங்கி, பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். இதில் சங்க செயலாளர் அய்யப்பன், ரேஷன் கடை பொறுப்பாளர் மணி கலந்து கொண்டார்.

அழகியபாண்டியபுரம், மேல்கரை, கேசவன்புதூர், புதுகிராமம், கீரிப்பாறை ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அழகியபாண்டிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மிக்கேல்ராஜ் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கினார்.

கடுக்கரையில் உள்ள ரேஷன் கடையில் ஊராட்சி மன்ற தலைவர் கமலா மகாராஜன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார். இதில் துணைத்தலைவர் தங்கம் மகாராஜன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அய்யப்பன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் முகமது சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தர்மபுரம்

தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஈத்தாமொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கம் நிகழ்ச்சி நடந்தது. கூட்டுறவு கடன் சங்க தலைவர் கந்தப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணன் முன்னிலையில் தர்மபுரம பஞ்சாயத்து தலைவி ரெங்கநாயகி கணேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார். இதில், தர்மபுரம் பஞ்சாயத்து உறுப்பினர்கள் சாந்தி, லதா கோபால், கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் கிருஷ்ணகுமாரி, பாப்பா, தர்மபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்