தஞ்சை மாவட்டத்தில் 6.67 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.2,500 பொங்கல் பரிசு வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்
தஞ்சை மாவட்டத்தில் 6 லட்சத்து 67 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500 பொங்கல் பரிசினை வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் அரிசி, சர்க்கரை, திராட்சை, ஏலக்காய், முந்திரிபருப்பு, கரும்பு ஆகியவை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா தஞ்சை திலகர் திடல் அருகே காவேரி சிறப்பங்காடி வளாகத்தில் உள்ள ரேஷன்கடைகளில் நேற்று நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பரசுராமன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், பால்வள தலைவர் காந்தி, மாவட்ட வருவாய் அதிகாரி அரவிந்தன், கூட்டுறவு இணைப்பதிவாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வைத்திலிங்கம் எம்.பி.
விழாவில் வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசுத்தொகுப்பினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி ரூ.2,500, கரும்பு, சர்க்கரை, அரிசி, திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகியவை வழங்கப்படுகிறது.
விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு. அதன் பின்னர் தான் மற்ற தொழில். அதே போல் நாட்டின் முன்னேற்றத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
6.67 லட்சம் குடும்ப அட்டைகள்
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 67 ஆயிரத்து 941 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500 வீதம் வழங்க ரூ.166 கோடியே 98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், கரும்பு வழங்குவதற்காக ரூ.4½ கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது தவிர பச்சரிசி 667 டன்னும், சர்க்கரை 667 டன்னும் வழங்கப்படுகிறது. இந்த பொருட்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 1,185 கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.’’என்றார்.
விழாவில் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத்தலைவர் சரவணன், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, மொத்த கூட்டுறவு பண்டக சாலை துணைத்தலைவர் ரமேஷ், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாமிவேல், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் துணைப்பதிவாளர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.