ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-01-05 01:17 GMT
கரூர்,

மக்களின் உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படும் தனியார் நிறுவனத்தை கண்டித்து நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். கோவை மண்டல மாநில செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் சிட்டிபாபு உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதில் தங்களது கோரிக்கைகள் குறித்து பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் இதே கோரிக்கைகளை கண்டித்து கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி சார்பில் அப்புசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்