பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
பெரம்பலூர்,
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 282 ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 1 லட்சத்து 81 ஆயிரத்து 851 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் ரூ.2,500-ருடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதன் தொடக்க விழா பெரம்பலூர் வெள்ளாளர் தெருவில் உள்ள அமராவதி-2 ரேஷன் கடையில் நேற்று நடந்தது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.ராமச்சந்திரன் (குன்னம்), இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் 40 குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் மற்றும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பையும், வேட்டி, சேலையையும் வழங்கி தொடங்கி வைத்தனர்.
இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் செல்வக்குமரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரும், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான என்.கே.கர்ணன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளரும், நிலவள வங்கியின் தலைவருமான சிவப்பிரகாசம் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கூட்டுறவுத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மற்ற ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்டவை போலீசார் பாதுகாப்புடன் வழங்கப்பட்டது. ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நீண்ட வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர். வருகிற 12-ந்தேதி வரை தினமும் டோக்கன் முறையில் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகாமல் சுழற்சி முறையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விடுபட்டவர்களுக்கு 13-ந்தேதி வழங்கப்படவுள்ளது.
மங்களமேடு பகுதியில்...
மங்களமேட்டை அடுத்த புதுவேட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 3 ஆயிரத்து 257 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை சங்க தலைவர் கிருஷ்ணசாமி வழங்கினார். அப்போது சங்க இயக்குனர்கள், செயலாளர் உடனிருந்தனர். இதேபோல் திருமாந்துறை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பை சங்க தலைவர் கே.எஸ்.செல்வமணி வழங்கினார். வயலூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை சங்க தலைவர் முத்தமிழ்செல்வன் வழங்கினார்.
அரியலூர் மாவட்டம்
அரியலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 739 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் ஜெயங்கொண்டத்தில் வெள்ளாளர் தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் பயனாளிகளுக்கு வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார்.
விழாவில் ஒன்றிய செயலாளரும், ஆவின் கூட்டுறவு சங்க துணை தலைவருமான தங்கபிச்சமுத்து, நகர செயலாளரும், நிலவள வங்கி தலைவருமான பி.ஆர்.செல்வராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான ஜெகன்ராஜ் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோமதி மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மீன்சுருட்டி, உடையார்பாளையம்
மீன்சுருட்டி பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உள்பட்ட ரேஷன் கடைகளில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளரும், கூட்டுறவு சங்க தலைவருமான ராஜாரவி தலைமை தாங்கினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்டவற்றை 1,392 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். விழாவில் அ.தி.மு.க. பொறுப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள், சங்க இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் முத்துசேர்வாமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளரும், கூட்டுறவு சங்க தலைவருமான கல்யாணசுந்தரம் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
உடையார்பாளையம் அருகே வாணத்திரையான்பட்டிணம் ரேஷன் கடையில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய செயலாளரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி தலைவருமான தங்கபிச்சைமுத்து வழங்கினார். இதில் துணைத்தலைவர் மஞ்சுளாஜெய்சங்கர், செயலாளர் செல்வம் மற்றும் அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். த.சோழங்குறிச்சி ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை தத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி தலைவர் சிவக்குணசேகரன் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுமதி, செந்தமிழ்செல்வி உள்ளிட்ட அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கீழப்பழுவூர், வி.கைகாட்டி
கீழப்பழுவூரில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி மருதமுத்து பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இலந்தைக்கூடம் கிராமத்தில் திருமானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், மாவட்ட கவுன்சிலர் தனசெல்வி சக்திவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வடுகபாளையம் கிராமத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதேபோல் திருமானூர் ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் அந்த பணி தொடங்கியது.
வி.கைகாட்டி பகுதியில் அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம் மற்றும் தேளூர் ஆகிய கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் காட்டுப்பிரிங்கியம் கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி, துணை தலைவர் அழகேசன் மற்றும் இயக்குனர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். ரெட்டிபாளையத்தில் பொதுக்குழு உறுப்பினரும், பெரியதிருக்கோணம் கூட்டுறவு சங்க தலைவருமான வை.கோ.சி.சேப்பெருமாள், ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி கணேசன் ஆகியோர் பரிசுத்தொகுப்பை வழங்கினர். காவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பாபூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளரும், புதுப்பாளையம் கூட்டுறவு சங்க தலைவருமான அன்பழகன், ஒன்றிய செயலாளர் (தெற்கு) பாலு என்ற பாலசுப்பிரமணியம், துணை செயலாளர் க.கு.சங்கர், விளாங்குடி கூட்டுறவு சங்க தலைவர் காமராஜ் ஆகியோர் பரிசுத்தொகுப்பை வழங்கினார்கள்.