அரியலூரில் அரசு அலுவலகங்களையொட்டி உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
அரியலூரில் அரசு அலுவலகங்களையொட்டி உள்ள சாைலயோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரியலூர்,
அரியலூர் மார்க்கெட் தெருவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம், கால்நடைத்துறை அலுவலகம், கிளை சிறைச்சாலை, நகராட்சி அலுவலகம், நீதிமன்றம், அரசு உயர்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் சொந்த கட்டிடத்தில் உள்ளன. இதில் அலுவலகங்களின் சுற்றுச்சுவரையொட்டி வெளிப்பகுதியில் சாலையோர கழிவுநீர் வாய்க்கால் மீது சிலாப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, சிலாப்புகள் மீது தற்காலிக கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த வாய்க்காலில்தான் நகரின் வடக்கு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர், மழைநீர் செல்கின்றன. தற்போது கழிவுநீர் வாய்க்காலின் மேற்பகுதி முழுவதும் கடைகள் அமைக்கப்பட்டு வீணாகும் பொருட்களை வாய்க்காலில் கொட்டிவிடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீர் வாய்க்கால் மீது கடைகள் உள்ளதால், நகராட்சி தூய்மை பணியாளர்களால் வாய்க்காலை சுத்தப்படுத்த முடிவதில்லை.
ஆக்கிரமிப்புகள்
அங்கு வியாபாரம் செய்யும் நபர்கள் இரவு நேரத்தில் அரசு அலுவலகங்களில் தங்களது பொருட்களை வைத்துவிட்டு செல்வதால், அதிகாரிகள் தங்களது வாகனங்களில் அலுவலகத்தில் இருந்து வெளியே ெசல்வதற்கு சிரமமாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, போலீசார் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் பல இடங்களில் அலுவலகங்களின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அவை சீரமைக்கப்படவில்லை. அவற்றை சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் கடந்த 2011-ம் ஆண்டு சாலையின் இருபுறமும் நடைபாதை மேடை அமைக்கப்பட்டது. மின் விளக்குகள் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. திடீரென அந்த பணிகள் நிறுத்தப்பட்டன. 10 ஆண்டுகளாகியும் அந்த பணி நடைபெறவில்லை. இந்நிலையில் அலுவலகங்களின் நுழைவு வாயிலையொட்டிய பகுதி வரை உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அரசு அலுவலக பகுதியும் ஆக்கிரமிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் இந்த பகுதியில் மின் விளக்குகள் எரிவதில்லை. மாவட்ட தலைநகரமான அரியலூர் நகரம் கிராமம் போன்று மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் வரை சாலையின் இருபுறமும் தற்காலிக தரைக்கடைகள் புற்றீசல் போல் பெருகிவருகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு இடமின்றி சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட சில சமயங்களில் போக்குவரத்து பாதிப்பால் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. 2021-ம் ஆண்டிலாவது அரியலூர் நகரை அழகுபடுத்தி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.