திருப்பூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 2,064 பேர் எழுதினர்

திருப்பூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 2 ஆயிரத்து 64 பேர் எழுதினர்.

Update: 2021-01-04 05:18 GMT
திருப்பூர்,

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் குரூப் 1-ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டித்தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு ஆகிய 2 வட்டங்களில் 16 தேர்வு மையங்களில் 4 ஆயிரத்து 501 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதற்காக 16 தேர்வு மைய மேற்பார்வையாளர்களும், 2 பறக்கும் படையினரும், 2 மொபைல் பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மற்றும் தேர்வு மையங்களை கண்காணிக்கும் வகையில் 16 வீடியோ கிராபர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, திருப்பூர் வடக்கு வட்டத்திற்குட்பட்ட பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, அங்கேரிபாளையம் சாலை, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

2,437 பேர் எழுதவில்லை

திருப்பூர் மாவட்டத்தில் 2 வட்டங்களில் 16 தேர்வு மையங்களில் 4, 501 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் 2 ஆயிரத்து 064 நபர்கள் மட்டுமே தேர்வை எழுதினர். மீதமுள்ள 2 ஆயிரத்து 437 பேர் தேர்வு எழுதவில்லை. இதன் விழுக்காடு 46 சதவீதம் ஆகும்.

மேலும் அனைத்து தேர்வர்களும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்பு, முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வை எழுதினார்கள். இந்த ஆய்வின் போது திருப்பூர் வடக்கு தாசில்தார் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்