திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை தர்மபுரி உதவி கலெக்டர் விசாரணை
நல்லம்பள்ளி அருகே திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
நல்லம்பள்ளி,
நல்லம்பள்ளி அடுத்த தடங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதையன். இவருக்கும், கோடியூர் கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி (வயது 21) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று தனலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து புதுப்பெண் தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உதவி கலெக்டர் விசாரணை
புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் தர்மபுரி உதவி கலெக்டர் தணிகாசலம் விசாரணை நடத்தி வருகிறார்.