மந்தாரக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; டிராவல்ஸ் உரிமையாளர் பலி
மந்தாரக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
மந்தாரக்குப்பம்,
மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட எஸ்.பி.டி,எஸ், நகரை சேர்ந்தவர் ரபீக் (வயது 25) டிராவல்ஸ் உரிமையாளர். இவர் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரிக்கு சென்றார். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினார். மந்தாரக்குப்பம் அருகே குறவன்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, நெய்வேலியில் இருந்து வடலூர் நோக்கி வந்த லாரி ஒன்று முன்னால் சென்ற மற்றொரு லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி எதிரே வந்த ரபீக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இது குறித்த தகவலின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரபீக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதியதில் டிராவல்ஸ் உரிமையாளர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.