மகுடஞ்சாவடி அருகே, வக்கீல் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மகுடஞ்சாவடி அருகே வக்கீல் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு போனது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-01-03 16:45 GMT
இளம்பிள்ளை, 

மகுடஞ்சாவடி அருகே உள்ள குப்பாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 49). வக்கீல். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

இந்த நிலையில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், செல்போன் ஆகியவை திருட்டு போய் இருந்தன.

இதுகுறித்த புகாரின்பேரில் மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்