தேனியில் ஏர் கலப்பையுடன் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்; அனுமதி மறுத்ததால் சாலை மறியல்

சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் தேனி அல்லிநகரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.;

Update: 2021-01-03 03:57 GMT
தேனி அல்லிநகரத்தில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பு செயலாளர் திருச்சி வேலுச்சாமி கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம், தேனி நகர தலைவர் முனியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஏர் கலப்பை மற்றும் கியாஸ் சிலிண்டருடன் அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். 

ஊர்வலத்தில் ஏர் கலப்பையை கொண்டு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். 100 மீட்டர் தூரம் மட்டும் ஊர்வலத்தை அனுமதிக்குமாறு காங்கிரஸ் கட்சியினர் போலீசாரிடம் கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர், பெரியகுளம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தடையை மீறி சுமார் சிறிது தூரம் ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தின் போது சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்