விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் திறப்பு கலெக்டர் நடவடிக்கை
தஞ்சையை அடுத்த வேங்கராயன்குடிக்காட்டில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. குறைதீர்க்கும் கூட்டத்தில் விடுத்த வேண்டுகோளையடுத்து கலெக்டர் இந்த நடவடிக்கையை எடுத்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை தாலுகாவில் உள்ளது வேங்கராயன்குடிக்காடு, வல்லுண்டாம்பட்டு, அதினாம்பட்டு, நாஞ்சிக்கோட்டை, சூரியம்பட்டி, வடக்குப்பட்டு ஆகிய கிராமங்கள். இந்த பகுதிகளில் மட்டும் நெல் சாகுபடி 1,500 ஏக்கரில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் மகசூல் ஆகும் நெல்லை விவசாயிகள் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ள பிற பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வந்தனர். இதனால் அதிக நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவும், மன உளைச்சலுக்கு விவசாயிகள் ஆளாகினர். தற்போது இந்த பகுதிகளில் சம்பா நெல் அறுவடை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை உடனடியாக விவசாயிகள் விற்பனை செய்யும் வகையில் வேங்கராயன்குடிக்காட்டில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கொள்முதல் நிலையம் திறப்பு
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காணொலி வாயிலாக விவசாயிகள் கலெக்டர் கோவிந்தராவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கலெக்டர் உடனடியாக புதிய நெல் கொள்முதல் நிலையம் திறக்க அதற்கான உத்தரவினை பிறப்பித்தார்.
பின்னர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சிற்றரசு உள்ளிட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து வேங்கராயன்குடிக்காட்டில் நேற்று புதிதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து, நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல துணை மேலாளர் பன்னீர்செல்வம், கொள்முதல் அலுவலர்கள் கணேசன், டேவிட், உதவியாளர் கண்ணன், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமல்நாதன், இயற்கை விவசாயி ஏரகரம் சுவாமிநாதன், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.