பூதலூர் பகுதியில் பொங்கல் பரிசு பொருட்களை பாக்கெட்டுகளில் அடைக்கும் பணி நாளை முதல் வினியோகம்

பூதலூர் பகுதியில் பொங்கல் பரிசு பொருட்களை பாக்கெட்டுகளில் அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாளை முதல் பொருட்கள் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட உள்ளன.

Update: 2021-01-03 03:01 GMT
திருக்காட்டுப்பள்ளி,

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, ஏலக்காய், உலர் திராட்சை, முந்திரி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

அதன்படி நாளை (திங்கட்கிழமை) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாக்கெட்டுகளில் அடைப்பு

இந்த நிலையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கான உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை தனித்தனி பாக்கெட்டுகளில் அடைக்கும் பணி பூதலூர் பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பூதலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 8 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் 5,850 ரேஷன் கார்டுகளுக்கு வழங்குவதற்கான பொருட்களை பெண்கள், கூட்டுறவு சங்க தலைவர் மாரியய்யா முன்னிலையில் பாக்கெட்டுகளில் அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கரும்பு கொள்முதல்

பொங்கல் கரும்பு வழங்குவதற்காக கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாகவும், அறிவித்தபடி நாளை பொங்கல் பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என கூட்டுறவு சங்க தலைவர் மாரியய்யா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்