திருவோணம் அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி பீகார் வாலிபர் கைது
திருவோணம் அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே குறிச்சி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள பயணிகள் நிழலகத்தில் 62 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் இரவு தூங்கி கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், அந்த மூதாட்டியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பயந்துபோன அந்த மூதாட்டி கூச்சல் போட்டார். மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பீகார் வாலிபர்
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வாட்டாத்திக்கோட்டை போலீசார், அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த 18 வயது வாலிபர் என்பதும், குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் கயிறு ஆலையில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும் அவர் மது போதையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக வாட்டாத்திக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.