திருவாரூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4½ லட்சத்தில் கட்டப்பட்ட குடிநீ்ர் தொட்டிகள்

திருவாரூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4½ லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டிகளை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2021-01-03 02:25 GMT
திருவாரூர்,

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருவாரூர் 5, 6-வது வார்டுகளில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட சிறுமின் விசை பம்பு நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகள் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி குடிநீர்த்தேக்க தொட்டிகளை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

மக்கள் பயன்பாட்டிற்கு

அடிப்படை தேவையான குடிநீர் மக்களுக்கு தட்டுபாடின்றி கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4½ லட்சம் செலவில் 2 சிறுமின்விசை பம்பு நீர்த்தேக்க குடிநீர்தொட்டிகள் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்காக பாடுகின்ற தி.மு.க.விற்கு என்றும் ஆதரவாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தி.மு.க. நகர செயலாளர் வாரைபிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், கட்சி நிர்வாகிகள் ரஜினிசின்னா, சிவா, ரோலி, பக்கிரிசாமி, மணிராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்