ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம்
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என திருவாரூரில் நடந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வசந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட பொருளாளர் சுந்தரலிங்கம், ஊரக வளர்ச்சித்துறை ஒய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் சவுந்தரபாண்டியன், முன்னாள் மாநில துணைத்தலைவர் புஷ்பநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரெயில்வே மேம்பாலம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பழுதடைந்த தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையை உடனே சீரமைக்க வேண்டும். நீடாமங்கலத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் பணி நீக்கம் உத்தரவினை ரத்து செய்து, உரிய பணப்பயன்களை அரசு உடனே வழங்கிட வேண்டும்.
ஆய்வு கூட்டத்தை கைவிட வேண்டும்
காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் அனைத்து கணினி உதவியாளர்களின் பணியினை நிரந்தரம் செய்திட வேண்டும். புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நீதிமன்ற வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகளை அரசு ரத்து செய்திட வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை புதிதாக கட்டி தர வேண்டும். அலுவலக நேரம் முடிந்த பின்னர் ஆய்வு கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் ஆய்வு கூட்டம் நடத்துவதையும் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் வாசுதேவன் வரவேற்றார். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன் நன்றி கூறினார்.