கோவில்பட்டியில், இன்று முதல்-அமைச்சர் பிரசாரம்: பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ- நத்தம் விசுவநாதன் ஆய்வு

கோவில்பட்டியில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்செய்வதையொட்டி அங்கு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தேர்தல் பணிக்குழு ெபாறுப்பாளர் நத்தம் விசுவநாதன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

Update: 2021-01-03 02:03 GMT
கோவில்பட்டி பஸ்நிலையம் முன்பு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் பார்வையிட்ட போது
முதல்-அமைச்சர் இன்று பிரசாரம்
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரப பயணத்தின் ஒரு பகுதியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிறார். முதலில் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வில்லிசேரியில் விவசாயிகளுடன் கலந்துரையாடலுடன் தனது பயணத்தை தொடங்கிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி கயத்தாறு முதல் கோவில்பட்டி வரை கொடி தோரணங்கள், வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு
இதையொட்டி நேற்று காலை கோவில்பட்டி, வில்லிசேரி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதலமைச்சர் பிரசசாரம் மேற்கொள்ள கூடிய இடங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டார். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (அதாவது இன்று) பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். தேர்தல் நேரத்தில் ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களை சந்தித்து விட்டு சென்று விடுவது வழக்கம். ஆனால், இப்போது புதிய முயற்சியாக தமிழக முதல்வர் புதிய உத்தியை கையாண்டு பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், வணிகப்பெருமக்கள் என சமுதாயத்தில் பலதரப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி, பிரச்சினைகளை நேரில் கண்டறிந்து கேட்டறிந்து தீர்வு கண்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. வரக்கூடிய தேர்தலில் கிடைக்கக்கூடிய வெற்றியை பறைசாற்றும்விதமாக மக்கள் கூட்டம் கூடுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முடங்கிப்போய் கிடக்கிறார். தன்னைத்தானே முடக்கிக்கொண்டுஇருக்கிறார். மீடியாக்கள் மூலம் மட்டுமே மக்களை சந்தித்து விட முடியாது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. மக்களை நேரில் சந்திக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்பதுபிரகாசமாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் வில்லிசேரி கிராம மக்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்