நெல்லை புதிய பஸ்நிலையத்தில் கட்டுமான பணி: மதுரை, சென்னை பஸ்கள் ஆம்னி பஸ்நிலையத்துக்கு இடமாற்றம்
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கட்டுமான பணி நடைபெறுவதை ெயாட்டி மதுரை, சென்னை பஸ்கள் ஆம்னி பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி பணி
நெல்லை வேய்ந்தான்குளம் எம்.ஜி.ஆர். புதிய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இதைெயாட்டி அங்கிருந்து இயக்கப்பட்டு வந்த பஸ்கள் அருகில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன.
ஆனால் சென்னை, மதுரை, திசையன்விளை புறநகர் பஸ்கள் மற்றும் சந்திப்புக்கு மட்டும் ஓடிய டவுன் பஸ்கள் ஆகியவை புதிய பஸ் நிலையத்தில் 4-வது பிளாட்பாரம் மற்றும் முன்பகுதி ரோட்டில் இருந்து இயக்கப்பட்டது.
இடமாற்றம்
இந்த நிலையில் 4-வது பிளாட்பார பகுதியில் புதிய கட்டிட பணிகள் நடைபெறுகிறது. இதற்காக 4-வது பிளாட்பாரம் முழுமையாக மூடப்பட்டது.
இதைெயாட்டி ஆம்னி பஸ் நிலையம் அருகில் இருந்த காலி இடத்தில், அதாவது பெருமாள்புரம் போலீஸ் நிலையத்துக்கு எதிரே உள்ள இடம் சீரமைக்கப்பட்டது. அங்கிருந்து நேற்று மதுரை, கோவில்பட்டி மார்க்கமாக சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன.
அதே நேரத்தில் ஏற்கனவே 1-வது பிளாட்பாரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த நாகர்கோவில், உடன்குடி, சாத்தான்குளம், ரெட்டியார்பட்டி மற்றும் சர்குலர் டவுன் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தின் நுழைவு வாசல் பகுதி ரோட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ்கள் தொடர்ந்து அங்கிருந்தே இயக்கப்படுகிறது.