துவரங்குறிச்சியில் மூதாட்டி கொடூர கொலை வழக்கு: 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை
துவரங்குறிச்சியில் மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 வாலிபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துவரங்குறிச்சி,
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சந்தைப் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹபீபா பீவி(வயது 67). இவர் தனிமையில் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 3 பவன் நகைகள் மற்றும் செல்போன் கொள்ளை போயிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
3 வாலிபர்களிடம் விசாரணை
அதிக அளவிலான குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவத்தில் வெளியில் உள்ளவர்கள் வந்து கொலை செய்ய வாய்ப்பு குறைவு என்பதால், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் மோப்பநாய் மூதாட்டி இறந்த வீட்டின் அருகில் தான் சென்றதே தவிர வெளியில் எங்கும் செல்லவில்லை.
இதையடுத்து மூதாட்டி வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் 20 வயது வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்திட முயன்ற போது அந்த நபர் போலீசின் பிடியில் இருந்து தப்பினார். பின்னர் அவரை போலீசார் நேற்று துவரங்குறிச்சி அருகே பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் அவருடன் தொடர்பில் இருந்த மணப்பாறையை சேர்ந்த மேலும் 2 வாலிபர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.