தொழிற்பள்ளிகளில் புதிய பிரிவுகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
தொழிற்பள்ளிகளில் புதிய பிரிவுகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு கூறி உள்ளார்.
திருச்சி,
2021-2022-ம் கல்வியாண்டிற்கு 2021-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள்/தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகிறது. நேற்று முதல் www.skilltraining.tn.gov.in. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2021-2022-ம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற்பிரிவுகள்/கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும். NEFT மூலம் தொழிற்பள்ளி பணம் (விண்ணப்பகட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம்) செலுத்தும்போது, தொழிற்பள்ளியின் வங்கி கணக்கில் இருந்து பரிமாற்றம் செய்யப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் எந்த தொழிற் பள்ளிக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பதை bank statementy கண்டறிய ஏதுவாக, தாளாளர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் இருந்து RTGS/NEFT மூலம் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற்பிரிவுக்கும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம், ஆய்வுக்கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் உள்ள தகவல் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் மாதம் 30-ந் தேதியாகும். அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். திருச்சி மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் விவரம் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.