ரெட்டிக்குடிக்காடு- அகரம் சீகூர் இடையே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை
ரெட்டிக்குடிக்காடு- அகரம் சீகூர் இடையே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம் வசிஷ்டபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டிக்குடிக்காட்டில் இருந்து அகரம் சீகூர் செல்வதற்கு சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மண் சாலை உள்ளது. பெரும்பாலான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை சமீபத்தில் பெய்த மழையால் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி அகரம் சீகூருக்கு வர வேண்டிய நிலை உள்ளது. ரெட்டிக்குடிக்காடு பகுதியில் வசிக்கும் மக்கள் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், பஸ் போக்குவரத்திற்கும் அகரம் சீகூர் பகுதிக்கு வரவேண்டி உள்ளது. ஆனால் மண் சாலை சேறும், சகதியுமாக ஆனதால் இந்த பகுதி மக்கள் ேபாக்குவரத்துக்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
கோரிக்கை
இந்த சாலையை சீரமைத்து கொடுத்தால், பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்லும் நிலை தவிர்க்கப்படும். எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடி நடவடிக்கை எடுத்து, அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.