உத்தனப்பள்ளி அருகே விபத்து: ஓய்வு பெற்ற வன ஊழியர் உள்பட 2 பேர் பலி - மொபட் மீது கார் மோதியது

உத்தனப்பள்ளி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற வன ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2021-01-02 14:46 GMT
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள அயர்னப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 65). ஓய்வு பெற்ற வன ஊழியர். அதேபகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (44). எலக்ட்ரீசியன். இவர்கள் 2 பேரும் நேற்று இரவு அயர்னப்பள்ளியில் இருந்து உத்தனப்பள்ளி நோக்கி மொபட்டில் சென்றனர்.

அப்போது உத்தனப்பள்ளியில் இருந்து ராயக்கோட்டை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. கூடுமாக்கனப்பள்ளி பகுதியில் கார் வந்தபோது டிராக்டர் ஒன்று டயர் பஞ்சராகி சாலையில் நின்று கொண்டு இருந்தது. இதனால் டிரைவர் டிராக்டரை கடந்து செல்ல முயன்றபோது எதிரே வந்த மொபட் மீது கார் மோதியது.

இந்த விபத்தில் எல்லப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். நாகராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்