இரட்டைவிலை கொள்கையை திரும்பப்பெற வேண்டும்; நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

இரட்டை விலை கொள்கையை திரும்பப்பெற வேண்டும் என நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.;

Update: 2021-01-02 01:56 GMT
கோவில்பட்டியில் நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டம் நடந்தபோது எடுத்த படம்
சங்க கூட்டம்
கோவில்பட்டி நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க புத்தாண்டு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் எம்.வெங்கடேஷ், மாநில துணை செயலாளர் நெல்லையப்பன், மாநில தகவல் தொடர்பு துறை செயலாளர் பிரபாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு அசோக்குமார், சீனிவாசன், அசோகன், பாலசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தனி நலவாரியம்
கூட்டத்தில், பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இரட்டைவிலை கொள்கையை திரும்ப பெற வேண்டும், தயாரிப்பு நிறுவனங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு குறைந்த விலையும், வினியோகஸ்தர்களுக்கு அதிக விலையும் நிர்ணயம் செய்வதால், வினியோகஸ்தர்கள், சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஜி.எஸ்.டி. மாதாந்திர ரிட்டன் எளிமைப்படுத்த வேண்டும்.

வினியோகஸ்தர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் நுகர்பொருள் வினியோகஸ்தர்களுக்கு தனி நலவாரியம் மற்றும் அமைச்சகம் அமைக்க வேண்டும். அரசியல் கட்சிகள் நுகர்பொருள் வினியோகஸ்தர்களின் கோரிக்கைகளை தங்களது தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சந்திர கண்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்