ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தென்காசி கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2021-01-02 01:36 GMT
தென்காசி காசிவிசுவநாதர் சுவாமி கோவிலில் நேற்று திரண்ட பக்தர்களை படத்தில் காணலாம்
வாசுதேவநல்லூர்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தென்காசி காசிவிசுவநாதர் சுவாமி கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிேஷகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புளியங்குடி அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள முப்பெரும்தேவியர் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாககன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குருநாதர் சக்தியம்மா ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணிநாதர் கோவில், மாரியம்மன் கோவில், குபேர ஆஞ்சநேயர் கோவில், நாதகிரி மலை மீதுள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்தவ ஆலயம்
பனவடலிசத்திரம் பகுதிகளான குருக்கள்பட்டி, கீழநீலிதநல்லூர், ஆயாள் பட்டி, பனவடலிசத்திரம், வடக்குபனவடலி, தெற்கு பனவடலி, தெற்குபுளியம்பட்டி, வடக்குஅச்சம்பட்டி, மூவிருந்தாளி, மேலஇலந்தைகுளம், தேவர்குளம், வன்னிக்கோனேந்தல், அடைக்கலாபுரம், சுப்பையாபுரம் ஆகிய ஊர்களில் புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

மேலும் செய்திகள்