காரிமங்கலத்தில் பா.ம.க.வினர் மனுகொடுக்கும் போராட்டம்

காரிமங்கலத்தில் பா.ம.க.வினர் மனுகொடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2021-01-01 13:32 GMT
காரிமங்கலம்,

வன்னியர்களுக்கு 20 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கக்கோரி காரிமங்கலம் ஒன்றிய, நகர பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வன்னியர் மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் அன்பழகன், உழவர் பேரியக்கம் மாநில துணைத்தலைவர் சிவசக்தி, ஒன்றிய செயலாளர்கள் பழனி, குமரன், சக்திவேல், சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். இதனைத் தொடர்ந்து காரிமங்கலம் ராமசாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று காரிமங்கலத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னசாமியிடம் பா.ம.க.வினர் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இதில் ஸ்ரீசிவம், அசோக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் நந்தினி ஈஸ்வரன், தமிழ்செல்வி நந்திசிவம், இளைஞரணி மோகன், மாணவரணி அருண்மூர்த்தி, சம்பத், முருகேசன், சஞ்ஜீவன், தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்