விழுப்புரம் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவராக கண்ணன் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவராக எல்.கே.கண்ணன் பொறுப்பேற்றார்.

Update: 2021-01-01 05:16 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் தேர்தல் நடைபெற்றது. வேளாண் விற்பனை குழுவின் செயலாளர் ஜெயக்குமார், தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்து தேர்தலை நடத்தினார்.

இதில் வேளாண் விற்பனைக்குழு தலைவராக கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எல்.கே. கண்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் துணைத்தலைவராக பழனிவேல், நிர்வாக இயக்குனர்களாக சாந்தி, நாராயணன், ராமச்சந்திரன், கண்ணன், சீனிவாசன், நடராஜன், பால்ராஜ், பாலமுரளி, கன்னியப்பன், சோழன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் பொறுப்பேற்பு

இவர்கள் அனைவரும் நேற்று விழுப்புரம் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமார், விழுப்புரம் வேளாண் துறை இணை இயக்குனர் ரமணன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மனோகரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் இந்திரா ஆகியோர் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் வேளாண் விற்பனைக்குழு மேலாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் புதிதாக பொறுப்பேற்ற வேளாண் விற்பனைக்குழு தலைவர் எல்.கே.கண்ணனுக்கு சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆவின் தலைவர் பேட்டை முருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, எசாலம் பன்னீர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகவேல், முன்னாள் நகர செயலாளர் நூர் முகமது, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் வண்டி மேடு ராமதாஸ், வளவனூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெகதீசன், மாவட்ட வக்கீல் அணி துணைத்தலைவர் வேலவன், ஒன்றிய மாணவரணி செயலாளர் ஏழுமலை, ஜெயலலிதா பேரவை செயலாளர் நெற்குணம் முருகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சவுரி ராஜன், மாவட்ட பிரதிநிதி மணிவேல், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்