வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி கோட்டூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோட்டூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தியிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.;
கோட்டூர்,
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி கோட்டூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோட்டூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தியிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் நடராஜன், ஒன்றிய செயலாளர் மணிவண்ணன், ஒன்றிய துணைத்தலைவர் பழனிவேல், சரவணன் உள்ளிட ஒன்றிய நிர்வாகிகள், கிளை தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.