‘மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்’; ஆலங்குளத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு

‘மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்’ என்று ஆலங்குளத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

Update: 2021-01-01 03:27 GMT
ஆலங்குளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனிெமாழி எம்.பி. பேசியதை படத்தில் காணலாம்.
பொதுக்கூட்டம்
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தேர்தல் பிரசார ெபாதுக்கூட்டம் ஆலங்குளத்தில் நடந்தது. தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். பூங்கோதை எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தங்கவேலு, பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் ஆலடி எழில்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கனிெமாழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களை வஞ்சிக்கும் திட்டங்கள்
கடந்த தேர்தலில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல திட்டங்களை நிறைவேற்றவே இல்ைல. ஆனால் மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக பதவியேற்ற மேடையிலேயே விவசாய கடன் தள்ளுபடி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றினார்.

தி.மு.க. ஆட்சியில் உயர்ந்திருந்த தொழில் துறையின் வளர்ச்சி விகிதம் தற்போது வெகுவாக குறைந்து விட்டது. தமிழக மக்களையும், விவசாயிகளையும் வஞ்சிக்கும் திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றுகிறது. ஆனால் இந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் தனது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்காக அ.தி.மு.க. அரசு ஆதரிக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற...
தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அனைத்து வேலைவாய்ப்புகளும் வடமாநிலத்தவர்களுக்கே கிடைக்கிறது. இதனையும் அ.தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழக மக்களின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் மத்திய பா.ஜனதா அரசிடம் அ.தி.மு.க. அடகு வைத்து விட்டது. அனைத்து டெண்டர்களும் அ.தி.மு.க.வினருக்கே வழங்கப்படுகிறது.

மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். இதற்கான நாள் நெருங்கி கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் பாப்புலர் செல்லத்துரை, ஜெயக்குமார், சமுத்திரபாண்டியன், மேகநாதன், ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, மாரிவண்ணமுத்து குமார், சிவன் பாண்டியன், பேரூர் செயலாளர்கள் வக்கீல் நெல்சன், லட்சுமணன், பொன்சுந்தரம், ஜெகதீசன், எம்.எம்.ஜோசப். அண்ணாவி காசிலிங்கம், சுபாஸ் சந்திரபோஸ், பரணி பொன்ராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி சங்கு கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்