சோழமாதேவியில் அம்மா மினி கிளினிக் திறப்பு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு அம்மா மினி களினிக்கை திறந்து வைத்தார். விழாவில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஹேமசந்த் காந்தி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வைத்தியநாதன், அவைத்தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் விக்கிரமங்கலம் அருகே சாத்தாம்பாடி கிராமத்தில் கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். விழாவிற்கு ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் தா.பழூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன், ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், தா.பழூர் ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி வீரமணிகண்டன், ஒன்றியக்குழு துணை தலைவர் கண்ணன், மாணவர் அணி ஒன்றிய செயலாளர் மலர்மன்னன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.