வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

Update: 2020-12-31 14:11 GMT
மொரப்பூர்,

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நேற்று தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவர் இமயவர்மன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் செந்தில், மாநில உழவர் பேரியக்க செயலாளர் முத்துசாமி, மருத்துவர் அணி உளவியல் டாக்டர் வசந்தராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பச்சையப்பன், கடத்தூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் வடிவேல் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் ஒடசல்பட்டியிலுள்ள கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழிதேவனிடம் பா.ம.க.வினர் கோரிக்கை மனுவை கொடுத்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் கலைமணி தென்னரசு, சின்னராஜ், முத்துக்குமரன், கந்தன், ராமசாமி, பூமணி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஞானம் வடிவேல், ஆறுமுகம், பரசுராமன், கல்பனா ஜெயகுமார், கோவிந்தராஜ், கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில மகளிரணி செயலாளர் கலைவாணி செம்மலை நன்றி கூறினார்.

நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட துணை தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அன்பு கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.

இதில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, மாநில நிர்வாகி சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர்கள் காமராஜ், மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், ராஜீவ்காந்தி, சிலம்பரசன், ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேசன் மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மக்கள் சமூக நீதிக்கட்சி மாநில துணைச்செயலாளர் கோவிந்தன், ஒன்றிய செயலாளர்கள் விஜயன், தம்பிதுரை, ஸ்ரீதர், அருள் கண்ணன், பேரூர் நகர செயலாளர்கள் சபரி, லட்சுமணன், கார்த்திக், பன்னீர்செல்வம், சரவணன், ஆனந்தன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் பா.ம.க. நிர்வாகிகள் ராஜேஸ்வரி ஜெயராமன், மைக் கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக பஸ் நிலையத்தில் இருந்து பா.ம.க.வினர் ஊர்வலமாக வந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மொரப்பூர் ஒன்றிய பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாக உறுப்பினர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மதியழகன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வன்னியபெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அம்பிகா கிருஷ்ணமூர்த்தி, நாராயணன், ஒன்றிய செயலாளர் பசவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சேட்டு வரவேற்று பேசினார்.

முன்னதாக பா.ம.க.வினர் ஊர்வலமாக வந்து மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனிடம் பா.ம.க.வினர் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் நகர செயலாளர் சங்கர், முன்னாள் நகர செயலாளர் பலராமன், மாநில மாணவரணி துணை செயலாளர் செந்தில்குமார், பசுமை தாயக மாவட்ட தலைவர் வீரமணி, மாவட்ட துணை செயலாளர்கள் மகேந்திரன், மாயக்கண்ணன், நிர்வாகிகள் வேடியப்பன், துரை, சக்திவேல், ராமஜெயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஒன்றிய தலைவர் கே.கே.முருகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்