வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் புதுக்கோட்டையில் கமல்ஹாசன் பேட்டி
வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்திடம் எனக்கு ஆதரவு தரும்படி கேட்பேன் என புதுக்கோட்டையில் கமல்ஹாசன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை,
மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவர் கமல்ஹாசன், வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். புதுக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்ட அவர் திருமயம் அருகே ஒரு ஓட்டலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்ற அறிவிப்பு வெளியிட்ட நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு அவரிடம் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு தருமாறு அணுகுவீர்களா? என கேட்கிறீர்கள். நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் இருந்த போது உடல்நிலை பற்றி செய்தி வெளியான நிலையில் அவரிடம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து பேசி்க்கொண்டிருந்தேன்.
எனது பிரசார பயணம் முடிந்ததும் சென்னை சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசுவேன். அவர் ஆரோக்கியமின்மை காரணத்தால் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்பதை அறிந்தேன். அவரது ஆரோக்கியத்தை நானும் விரும்புகிறேன். அவர் நலனை விரும்புகிறவர்களில் நானும் ஒருவன். கண்டிப்பாக அவரிடம் நான் ஆதரவு கேட்பேன். தேர்தலில் நிற்கும்போது எல்லோரிடமும் ஆதரவு கேட்க வேண்டும். அதுவும் என் நண்பனிடம் கேட்காமல் இருப்பேனா.
உடல் நலன்
எனக்கு ஆதரவு அளிப்பது பற்றி ரஜினிகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும். அவருக்காக நான் பேசுவது நியாயமாக இருக்காது. அரசியல் கட்சி தொடங்க போவது இல்லை என அவர் எடுத்த முடிவை பலரும் வரவேற்ற நிலையில் நண்பனாக நானும் வரவேற்கிறேன். அவர் உடல் நலன் கருதி எடுத்த முடிவில் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் `என் ரஜினி' என நான் கூறுவது உண்டு. அதற்கான உரிமையும் எனக்கு உண்டு. அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஒன்று இருப்பதற்கு முன்பே `என் ரஜினி' என நான் கூறுவது உண்டு. திரைத்துறையில் நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம். அரசியலில் அவர் விலகி இருக்கிற நிலையில் நாங்கள் இணைந்து பணியாற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற எண்ணம் உள்ளது.
மரண தண்டனை தீர்வல்ல
ஏம்பல் சிறுமி கொலை சம்பவத்தில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை பற்றியும், சிறுமிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் எனது அறிவுரை என்ன என்பது பற்றி கேட்கிறீர்கள். இதில் அறிவுரை பற்றி சொல்லி தெரியவேண்டிய விஷயமில்லை. அறிவார்ந்த சமுதாயத்தில் செய்யக்கூடாது என்பது இன்னும் புரியவில்லை என்றால் அதனை தண்டனை மூலமாகத்தான் புரிய வைக்க முடியும். அதேநேரத்தில் மனித உயிர்களை பறிப்பதால் அது வந்துவிடாது. என்னுடைய தனிப்பட்ட கொள்கை மரண தண்டனைக்கு எதிரானது.
மரண தண்டனை ஒன்றுதான் இதற்கு தீர்வு அல்ல. நமது வீட்டில் ஆண் என்ற ஒரு வரைபடத்திற்கு நாம் கொடுக்கும் லட்சணங்களையும், பெண் பிள்ளைகளுக்கு சொல்லும் உவமைகளை எல்லாம் இந்த காலத்திற்கேற்ப, கல்விக்கு ஏற்ப மாற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். இதெல்லாம் மாற வேண்டும் என சொன்னவர்கள் எல்லாம் செத்து 70, 80 வருஷம் ஆயிடுச்சு. பாரதியார் உள்பட சொல்கிறேன். புதுமைப்பெண் என்று பாரதியார் பாடியதை இன்றும் நம்மால் உருவாக்க முடியவில்லை என்பது தான் பெரிய சோகம்.
தேர்தல் கூட்டணி
ஆன்மிக அரசியலுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என பா.ஜ.க. கூறியிருப்பதில் ஆன்மிகத்திற்கும், எனக்கும் பெரிய விரோதம் கிடையாது. எனக்கு அது கிடையாது என்பதை தவிர. ஆன்மிகத்தோடு எனக்கு விரோதம் இல்லை. அதேநேரத்தில் ஆன்மிகத்தை ஏற்றுக்கொள்ளும்படி யாரும் என்னை நிர்பந்திக்க முடியாது. திராவிடத்தை இரு கட்சிகளாக பிரித்து சொத்தாக கொடுத்தது தான் தவறு. திராவிடன் என்பது அனைவருக்கும் பொருந்தும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பற்றி தற்போது எதுவும் சொல்ல முடியாது. ஜனவரியில் தெரிவிக்கப்படும் என கூறிவிட்டேன். அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து, தி.மு.க.விடம் மென்மையான போக்கை நான் கடைப்பிடிப்பதாக கூறமுடியாது. தற்போது நடந்து கொண்டிருக்கும் குற்றத்தை தடுக்க வேண்டும். ஏற்கனவே நடந்த குற்றங்களுக்கு கொஞ்சம் பேர் ஜெயிலுக்கு போயிட்டு வந்தாங்க. இன்னும் கொஞ்ச பேர் போகலை. நான் பா.ஜ.க.வின் `பி' டீம் இல்லை என்பதை மறுத்துவிட்டேன்.
போட்டியிடும் தொகுதி
மக்கள் நீதி மய்யத்தின் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்பது எனது கருத்தும், கட்சியின் கருத்துமே ஆகும். வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை கூற முடியாது. 234 தொகுதியும் எனது தொகுதி தான்.
இவ்வாறு அவர் கூறினார்.