சேலத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை - கந்துவட்டி கொடுமையா? போலீசார் விசாரணை

சேலத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கந்துவட்டி கொடுமையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-12-30 10:03 GMT
சேலம்,

சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். எலக்ட்ரீசியன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். போதிய வருமானம் இல்லாததால் அந்தப் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் கிருஷ்ணவேணி ரூ.30 ஆயிரம் கடன் வாங்கினார்.

கொரோனா பிரச்சினையால் சரியான வேலையும், போதிய வருமானமும் இல்லை. இந்த நிலையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் கடனை திருப்பி செலுத்துமாறு கிருஷ்ணவேணியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வேறு ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி மகளிர் சுய உதவி க்குழுவின் கடனை அடைத்து உள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணவேணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளின் தாயான கிருஷ்ணவேணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்