வருகிற சட்டமன்ற தேர்தலில் ‘அ.தி.மு.க.வை ரஜினிகாந்த் ஆதரித்தால் ஏற்றுக்கொள்வோம்’ அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
‘வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை ரஜினிகாந்த் ஆதரித்தால் ஏற்றுக்கொள்வோம்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதும், தொடங்காமல் இருப்பதும் அவரது சொந்த விருப்பம். பொதுவாக நடிகர் யார் கட்சி ஆரம்பித்தாலும், அதனால் அ.தி.மு.க.வுக்கு எவ்வித பின்னடைவும் இல்லை. நண்பர் என்கிற முறையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
வருகிற சட்டமன்ற தேர்தலின்போது ரஜினிகாந்த் யாருக்கு வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்பது அவருடைய சொந்த விருப்பம். இந்த விஷயத்தில் அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. தேர்தலின்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக அவர் வாய்ஸ் கொடுத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
கமல்ஹாசன்
பழுத்த மரத்தில் தான் கல்லடி படும், பட்டுப்போன மரத்தில் யாரும் கல் எறியமாட்டார்கள். அ.தி.மு.க. பழுத்த மரமாக, பூத்துக்காய்த்து, கனிகளாக தொங்கிக்கொண்டிருக்கும் மரமாக இருக்கிறது. அ.தி.மு.க. பற்றி நடிகர் கமல்ஹாசன் பேசினால்தான் அவரை மக்கள் நினைப்பார்கள் என்று கருதி பேசி வருகிறார்.
தொட்டில் குழந்தை திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. இத்திட்டத்தை தொடர்ந்து அன்னை தெரசா நேரில் வந்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்தினார். இதெல்லாம் தெரிந்துதான் கமல்ஹாசன் பேசுகிறாரா? இவர் இங்குதான் இருக்கிறாரா? இந்த நாட்டில் தான் இருக்கிறாரா? என தெரியவில்லை.
விமர்சனம்
தொட்டில் குழந்தை திட்டத்தை கமல்ஹாசன் நினைவு கூர்ந்தால் சரி. பச்சிளம் பெண் குழந்தைகள் கொல்லப்படுவது பற்றி இயக்குனர் பாரதிராஜா கருத்தம்மா திரைப்படம் மூலமாக வெளிப்படுத்தினார். தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்த பிறகு தமிழகத்தில் ஒரு பெண் சிசு கூட அழிக்கப்படவில்லை என்ற வரலாற்றை உருவாக்கியவர் ஜெயலலிதா. இதுபோன்ற திட்டங்கள் பற்றி தெரியாமல் கமல்ஹாசன் விமர்சனம் செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.