சட்டமன்ற தேர்தல் தேதியை பொறுத்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு தேதி அறிவிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
சட்டமன்ற தேர்தல் தேதியை பொறுத்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 358 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார அரசாணை வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தொடக்கக் கல்வி இயக்கக இயக்குனர் பழனிச்சாமி வரவேற்றார்.
இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார அரசாணைகளை பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர்.
அமைச்சர் பேட்டி
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்வி, தொழில், வேளாண்மை ஆகியவற்றில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அமைதியான மாநிலம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ஏராளமானோர் தொழில் தொடங்குகின்றனர். இதனால் படித்த இளைஞர்களுக்கு அடுத்த 6 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
7.5 சதவீத உள்ஒதுக்கீடு காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வு பயிற்சி பெற 28 ஆயிரத்து 150 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ெபாதுத்தேர்வு தேதி
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பாடத்திட்ட குறைப்பு, செய்முறை தேர்வு நடைபெறும் தேதிகள் இன்னும் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும். தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவிப்பதை பொறுத்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணை
அவரிடம், மயிலாடுதுறை தனியார் புத்தக கடையில் ஆயிரக்கணக்கில் அரசு பள்ளி பாடப்புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘விற்பனை செய்வதற்காக கூட தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் புத்தகங்களை சம்பந்தப்பட்ட நபர் வாங்கி வைத்திருக்கலாம். யார் வேண்டுமானாலும் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. எனினும் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில், சின்னப்பன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் விஜயா, கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் சண்முகவேல், முதல்வர் காளிதாச முருகவேல், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணை தலைவர் பழனிசாமி, நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி நன்றி கூறினார்.