நெல்லையில் கார்களில் பம்பர் கம்பிகள் அகற்றம்

நெல்லையில் கார்களில் பம்பர் கம்பிகள் நேற்று அகற்றப்பட்டன.

Update: 2020-12-30 02:18 GMT
நெல்லை,

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வீன் மற்றும் ஊழியர்கள் நேற்று பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகே சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த 30 கார்களில் சோதனை நடத்தினார்கள். இதில் 8 கார்களில் பம்பர் கம்பிகள் பொருத்தப்பட்டு இருந்தது. அதை போக்குவரத்து அதிகாரிகள் அகற்றினார்கள்.

போலீஸ் கமிஷனர் அறிக்கை

இதற்கிடையே நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக். எம்.டாமோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் தனியார் இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் (கார், ஜீப், வேன், ஆட்டோ, லோடு ஆட்டோ, லாரி மற்றும் இதர வாகனங்கள்) விபத்தின்போது வாகனத்திற்கு சேதம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு அவற்றின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள், அதாவது பம்பர் கம்பிகள் சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகனத்தில் பயணிப்பவர்கள் பாதுகாப்பிற்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அவைகளை வாகனத்தில் பொருத்துவது மோட்டார் வாகன சட்டம் பிரிவு படி விதிமீறல் மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே வாகனங்களின் முகப்பில் தடுப்பு கம்பிகள் பொருத்தியிருக்கும் அனைத்து இலகு ரக மற்றும் கனரக வாகனங்களின் டிரைவர்கள், உரிமையாளர்கள் உடனடியாக அகற்றி விட்டு பயணிக்கவும், மீறும் வாகனங்களின் மீது நெல்லை மாநகர பகுதிக்குள் காவல்துறை மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்