செங்கல்பட்டு களத்துமேடு பகுதியில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம்

செங்கல்பட்டு களத்துமேடு பகுதியில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் நரேந்திரன் தலைமை தாங்கினார். செல்வகுமார் வரவேற்றார்.;

Update:2020-12-30 07:02 IST
சிறப்பு விருந்தினர்களாக வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் மலர் கருணாநிதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அன்புச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது அங்கு கூடியிருந்த 3,4,6,7. வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள், எங்கள் பகுதியில் 2 வாரத்திற்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது என்றும், அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை என்றும் சரமாரியாக குற்றம் சாட்டினர்.

இதையடுத்து பேசிய வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இவையெல்லாம் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சந்தானம், ஒரகடம் சிலம்புச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்