திருச்சி சிவன் கோவில்களில் நடராஜருக்கு அபிஷேகம் இன்று ஆருத்ரா தரிசனம்

திருச்சி சிவன் கோவில்களில் நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

Update: 2020-12-30 01:10 GMT
திருச்சி,

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று மாலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அபிஷேகம் முடிந்ததும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் நடராஜரை தரிசித்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக சுவாமி, அம்பாள்வீதி உலா நடைபெறவில்லை. இன்று(புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஆருத்ரா தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

நடராஜருக்கு அபிஷேகம்

திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோவிலில் நேற்று இரவு 8 மணி அளவில் நடராஜருக்கு திருநீறு, சந்தனம், குங்குமம் மற்றும் பால், தயிர், இளநீர், பன்னீ்ர், பஞ்சாமிர்தம் மற்றும் பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று காலை சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைெபறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல, உய்ய கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோவில் உள்பட முக்கிய சிவன் கோவில்களில் நேற்று ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்