பவானி அருகே தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து நாசம்

பவானி அருகே நடந்த தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து நாசம் ஆனது.

Update: 2020-12-29 06:27 GMT
பவானி,

பவானியை அடுத்த தாளபையனூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் ஓலை குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் மாதையன் உறங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டின் ஒரு பகுதியில் திடீரென கரும்புகை வந்தது. இதைத்தொடர்ந்து தீ மளமளவென பிடித்து கொழுந்திவிட்டு எரிய தொடங்கியது.

எரிந்து நாசம்

இதில் தூக்கத்தில் இருந்து மாதையன் திடுக்கிட்டு எழுந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். எனினும் முடியவில்லை. உடனே அங்கிருந்தவர்கள் இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் வீ்ட்டில் இருந்த ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, டி.வி., துணிகள் மற்றும் உணவு பொருட்கள் ஆகியவை எரிந்து நாசம் ஆனது.

மேலும் செய்திகள்