கும்பகோணத்தில் பயங்கரம்: தொழிலாளியை ெகான்று உடல் எரிப்பு? போலீசார் விசாரணை
கும்பகோணத்தில், தொழிலாளியை கொன்று உடல் எரிக்கப்பட்டது. இது ெதாடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் கம்மாளர் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர்(வயது 38). கூலித்தொழிலாளி. இவர், தன்னுடன் கல்லூரியில் படித்த சுகன்யா என்ற பெண்ணை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரதீப்(12) என்ற மகனும், பூர்ணா(4) என்ற மகளும் உள்ளனர். சுகன்யா, நரசிங்கன்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதர் தனது மனைவியிடம் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியில் சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடுதிரும்பவில்லை.
எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்
இந்த நிலையில் ஸ்ரீதர் நேற்று காலை கும்பகோணம் ஈ.பி. காலனி பகுதியில் உள்ள சாலையில் தலையில் ரத்த காயங்களுடன் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தவர்கள் ஸ்ரீதர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மனைவி கதறல்
பின்னர் இறந்தவர் ஸ்ரீதர்தான் என்பதை உறுதி செய்ய அவரது மனைவி சுகன்யாவிற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தனது மகன் பிரதீப் உடன் வந்த சுகன்யா இறந்தது தனது கணவர் ஸ்ரீதர்தான் என்பதை உறுதிபடுத்தியதுடன் கணவரின் உடலைப்பார்த்து கதறி அழுதார்.
இதனை தொடர்ந்து போலீசார் ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் எந்தவித தடயமும் கிடைக்காததால் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு தஞ்சையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
எரித்துக்கொலை?
இதையடுத்து ஸ்ரீதரின் மகன் பிரதீப்பிடம் போலீசார் விசாரணை செய்தனர். இதில் ஸ்ரீதர் வீட்டில் இருந்து எப்போது கிளம்பி எங்கே சென்றார்? இரவு நேரத்தில் அவர் வெளியில் செல்வதற்கான காரணங்கள் என்ன? அவரை நேற்று இரவு கடைசியாக யார் பார்த்தார்கள்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர்.
மேலும் ஸ்ரீதர் நேற்று முன்தினம் சென்ற இடங்கள் எது? அந்த இடத்தில் என்ன நடந்தது? அங்கிருந்த நபர்கள் யார்? என்பது பற்றி விசாரித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் ஸ்ரீதர் சென்ற பகுதிகளுக்கு தனித்தனி குழுவாக சென்று விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் ஸ்ரீதர் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததால் அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டாரா? என்பது பற்றியும் விசாரித்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இந்த கொலை தொடர்பாக சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை..
இது குறித்து போலீசார் கூறும்போது, ஸ்ரீதர் ஓட்டி வந்த மொபட்டை வைத்து விசாணையை தொடங்கியுள்ளோம். எனவே விரைவில் கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவந்து விடும். இதையடுத்து கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.