ஆபத்தான வருவாய் ஆய்வாளர் கட்டிடம்-குண்டும், குழியுமான சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஆபத்தான வருவாய் ஆய்வாளர் கட்டிடம், குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
திருமயம்,
திருமயம் தாலுகா அலுவலகம் அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த கட்டிடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்டவர்கள் இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
*கறம்பக்குடி அருகே பொன்னன்விடுதி கிழக்கு, மற்றும் மேற்கு தெருவில் இருந்து புதிய பள்ளி கட்டிடத்திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், இந்த சாலை மேலும் சேதம் அடைந்துள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி அந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனிமேலாவது அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கார் நிறுத்துமிடம் அமைக்க கோரிக்கை
*கந்தர்வகோட்டையில் வாடகை கார்ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை செங்கிப்பட்டி சாலையோரத்தில் இருபுறங்களிலும் நிறுத்தி வருகின்றனர். இதன்காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே பஸ்நிலையத்தில் வாடகை கார்களை நிறுத்த இடம் ஒதக்கி கூரை அமைத்து தரவேண்டும் என்றும், ஓட்டுனர்களுக்கு ஓய்வறை அமைத்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெயர்பலகை தவறை திருத்த வேண்டும்
*வடகாடு அருகே உள்ள புள்ளான்விடுதியில் இருந்து அனவயல் வழியாக ஆலங்குடி செல்லும் சாலையில் வழிகாட்டி பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஊர் பெயர் அனவயல் என்பதற்கு பதிலாக தவறாக அவைவயல் என்று உள்ளது. அதனை சரியாக திருத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.