குழந்தைகளை பஸ்நிலையத்தில் தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண் கைது வாலிபரும் சிக்கினார்

பத்தினம்திட்டா அருகே குழந்தைகளை பஸ் நிலையத்தில் தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2020-12-28 13:09 GMT
பெரும்பாவூர்,

பத்தினம்திட்டா மாவட்டம் வெட்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராம்தாஸ். இவருடைய மனைவி பீனா (வயது 32). இவருக்கு திருமணம் முடிந்து 12 மற்றும் 9 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர். ராம்தாஸ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் பீனாவுக்கும் ரதீஷ் (வயது 30) என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் பலமுறை தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் கள்ளக்காதலியுடன் பேசிய ரதீஷ், உடனடியாக பத்தினம்திட்டா பஸ் நிலையத்துக்கு வரும்படி கூறினார். இதையடுத்து அவர் 2 குழந்தைகளுடன் பத்தினம் திட்டா பஸ்நிலையத்துக்கு வந்தார்.

பின்னர் அவர் அங்குள்ள பயணிகள் இருக்கும் இடத்தில் தனது குழந்தைகளை அமர வைத்துவிட்டு, கடைக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் நீண்டநேரம் ஆகியும் வரவில்லை. இதனால் குழந்தைகள் அழுதனர்.

இது குறித்து தகவல் அறிந்த பத்தினம்திட்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குழந்தைகளிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் மாயமான பீனாவை தேடினார்கள். அப்போதுதான் அவர் தனது குழந்தைகளை பஸ்நிலையத்தில் தவிக்கவிட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பத்தினம்திட்டா அருகே உள்ள தட்டமயில் என்ற இடத்தில் உறவினர் வீட்டில் மறைந்து இருந்த ரதீஷ், பீனா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், 2 பேரும் சேர்ந்து பெங்களூரு, மைசூரு உள்பட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, ஜாலியாக இருந்ததும், 2 பேரும் திருமணம் செய்து கொண்டு வாழ முடிவு செய்ததாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்