நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-12-28 05:02 GMT
நாகப்பட்டினம்,

நாகையில் நீலாயதாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த ேகாவிலில் சனீஸ்வரர தனி சன்னதில் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த ேகாவிலில் சனிப்ெபயா்ச்சி விழா நடந்தது. இதை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு மஞ்சள், திரவியம், மாப்பொடி, இளநீர், பஞ்சாமிர்தம், பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் தங்க கவசம் சாத்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காலை 5.22 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. .இதில் கோவில் செயல் அலுவலர் பூமிநாதன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் ெசய்தனா்.

வேதாரண்யம்

வேதாரண்யத்ைத அடுத்த மருதூர் மஞ்சக்கண்ணியில் உள்ள சோமநாதர் ேகாவிலில் சனிப்பெயா்ச்சி விழா நடந்தது. இந்த ேகாவிலில் தனி சன்னதியில் உள்ள சனிபகவானுக்கு நல்எண்ணெய், இளநீர், சந்தனம், மஞ்சள், தேன், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து ெகாண்டு சாமி தாிசனம் ெசய்தனா்.

மேலும் செய்திகள்