சனீஸ்வரர் அவதரித்த தலம்: திருக்கொடியலூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா
சனீஸ்வரர் அவதரித்த தலமான திருக்கொடியலூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
குடவாசல்,
சனி பகவான் நேற்று அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை முன்னிட்டு சனீஸ்வரர் அவதரித்த தலமான திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள திருக்கொடியலூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் உள்ள மங்கல சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடந்தது.
அதிகாலை 4 மணியளவில் வேத விற்பன்னர்கள், வேத மந்திரம் ஓத மகா யாகம் நடந்தது. சரியாக 5 மணி அளவில் சனிபகவானுக்கு 108 லிட்டர் பால், பன்னீர், சந்தனம், திரவியம், தயிர், இளநீர் ஆகியவற்றால் மகா அபிஷேகம் நடந்தது. 5.22 மணிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திரளான பக்தர்கள்
இதில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து திரளான பக்தர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தன்ராஜ், தக்கார் மாதவன், மேலாளர் வள்ளி கந்தன் ஆகியோர் செய்து இருந்தனர்.
விழாவிற்கான பாதுகாப்பு பணிகளை பேரளம் போலீசார் சிறப்பாக செய்திருந்தனர்.
இதபோல திருவாரூர் அருகே செருகுடி ஈஸ்வரவாசல் கிராமத்தில மங்கள சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு யாகம் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பொங்கு சனீஸ்வரர் கோவில்
திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அபிஷேகத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. காலை 6 மணிக்கு மேல் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் மகாதேவன்.சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவ குகன் தேவதாஸ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.