பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படும் கலெக்டர் விஷ்ணு தகவல்
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
நெல்லை,
அரசு அறிவிப்பின்படி பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழுக்கரும்பு, துணிப்பை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரொக்க தொகை ரூ.2.500 ரேஷன் கடைகள் மூலம் நெல்லை மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை வழங்கப்படுகிறது.
இதற்காக நெல்லை மாவட்டத்தில் அரிசி பெறும் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்க நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு உள்ளது. வருகிற 30-ந்தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுதோறும் நேரடியாக சென்று டோக்கன் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் வர வேண்டாம்.
புகார் தெரிவிக்கலாம்
டோக்கன் வழங்குவதில் குறைபாடுகள் இருப்பின் புகார் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால், மாவட்ட வழங்கல் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்: 0462-2500761 என்ற எண்ணிலும், 94450 00379, 94434 16041 ஆகிய ெமாபைல் எண்களிலும் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். மேலும் அரிசி பெறும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 4 -ந் தேதி முதல் 12-ந் தேதி தேதி வரை அந்தந்த ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட நாள் மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.