மோட்டார் சைக்கிள்-ஆட்டோ நேருக்கு நேர் மோதல்; மீன் வியாபாரி பலி

பேரம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் மீன் வியாபாரி பரிதாபமாக பலியானார்.

Update: 2020-12-27 21:50 GMT
நேருக்கு நேர் மோதல்
காஞ்சீபுரம் மாவட்டம் சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). இவர் மீன் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி ரோஸ் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் காய்கறிகளை வாங்குவதற்காக பேரம்பாக்கம் சந்தைக்கு வந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

பலி
இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்