திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,688 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது
திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 688 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசினார்.
ஆரணி,
ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2020-21-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், வி.பன்னீர்செல்வம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.அருள்செல்வம், மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராசன், பூங்கொடிதிருமால்,மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் வக்கீல் கே. சங்கர், ஆவின் துணை தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன் ,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எஸ்.ஜோதிலிங்கம், வைகை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பி.ஆர்.ஜி.சேகர், நகர கூட்டுறவு வங்கி தலைவர் அசோக்குமார், மேற்கு ஆரணி ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள்சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.சரவணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
22,688 பேருக்கு
அவர் பேசுகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் 22 ஆயிரத்து 688 பேருக்கு சுமார் 9 கோடி மதிப்பிலான விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. இதில் முதல் கட்டமாக ஆரணியில் இன்று வழங்கப்படுகிறது என்றார்.
தொடர்ந்து ஆரணி புனித வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. ராட்டினமங்கலம் கிராமத்தில் நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் மந்தவெளி பகுதியில் விளையாட்டு மைதானத்தில் சுமார் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியிலும் அமைச்சர் கலந்து கொண்டார். தொடர்ந்து முள்ளிப்பட்டு கிராமத்தில் மினி கிளினிக் மருத்துவமனையை அமைச்சர் திறந்து வைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் செய்யாறு சுகாதார துணை இயக்குனர் அஜிதா, தச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் பிரகாஷ், ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் த.சம்பத், தலைமை ஆசிரியர்கள் கருணாகரன், சாந்தி, மேற்கு ஆரணி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் குன்னத்தூர் வி.எஸ்.செந்தில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் மகேஸ்வரிசேகர் ,மாமண்டூர் பி.சுப்பிரமணி உள்பட கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழன் நன்றி கூறினார்.