வேட்டவலத்தில் எதிர்க்கட்சியினர் சாலை மறியல் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரிக்கை
வேட்டவலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., விவசாய சங்க பிரநிதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய எதிர்க்கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேட்டவலம்,
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் வேட்டவலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., விவசாய சங்க பிரநிதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய எதிர்க்கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்துக்கு முனியன், ராஜேந்திரன், சுப்ரமணி, திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க.வை சேர்ந்தமுருகன், திராவிட விவசாயிகள் சங்க நிறுவனர் பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொறுப்பாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட, வட்ட, கிளை கழக நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகளை மத்திய அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும், எனக் கோஷம் எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேரை வேட்டவலம் போலீசார் கைது செய்து, அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் மாலையில் விடுதலை செய்தனர்.